நாட்டை விட எதுவும் முக்கியமில்லை என்பதை கோலி உணரவேண்டும் - கபில்தேவ் கருத்து


நாட்டை விட எதுவும் முக்கியமில்லை என்பதை கோலி உணரவேண்டும் - கபில்தேவ் கருத்து
x
தினத்தந்தி 16 Dec 2021 9:46 AM GMT (Updated: 2021-12-16T15:17:52+05:30)

நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என கோலி குறித்து கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை ,

ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது.அவருக்கு மாற்றாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டது. தென் ஆப்பிரிக்க  கிரிக்கெட் தொடர்  முதல் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு நேர ஒருநாள் மற்றும் 20 வது ஓவர்  கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவர் என அறிவிக்கப்பட்டது .

.இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தனி விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி நேற்று காணொலி வாயிலாக மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பாக இந்திய அணியின் தேர்வு கமிட்டியினர் என்னை தொடர்பு கொண்டு ஆலோசித்தனர். அப்போது டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விவரத்தை நானும், தேர்வு கமிட்டி தலைவரும் (சேத்தன் ஷர்மா) ஏற்றுக் கொண்டோம். 

இறுதியாக, இனி ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக நான் தொடர முடியாது என்று 5 பேர் கொண்ட தேர்வு கமிட்டியினர் முடிவு செய்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதற்கு நான், ‘அப்படியா நல்லது’ என்று பதிலளித்தேன். அதாவது டெஸ்ட் அணித் தேர்வுக்கு பிறகு தான் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டதே தவிர, அதற்கு முன்பு வரை கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை.

இவ்வாறு கோலி   தெரிவித்தார்.

இந்த நிலையில் விராட் கோலியின் இந்த பேட்டி குறித்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

நான் கோலியின் தீவிர ரசிகன் ஆனால் எந்த வீரரும் பிசிசிஐ தலைவர் அல்லது வாரியத்திற்கு எதிராக பேசக்கூடாது என்று நினைக்கிறேன். நான் கேப்டனாக வெளியேற்றப்பட்டபோது எனக்கும் வருத்தம் இருந்தது. ஆனால் நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . நாட்டிற்கு மேல் எதுவும் முக்கியமில்லை. விராட் கோலி அளவுக்கு சிறப்பாக அவரை தேர்வு  செய்யும் தேர்வாளர்கள்  கிரிக்கெட் விளையாடியிருக்க மாட்டார்கள், ஆனால் அவரது கேப்டன் பதவியை பற்றிய முடிவு  எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. தேர்வாளர்கள்  யாருக்கும் அவர்கள் தேர்வு பற்றிய முடிவை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஏன் அவர்கள் , விராட் கோலியிடமும்  கூட அவர்கள் எதையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story