குழந்தையின் புகைப்படம்... மாண்பை காக்கும் ஊடகங்கள்...! கோலி -அனுஷ்கா நன்றி


குழந்தையின் புகைப்படம்... மாண்பை காக்கும் ஊடகங்கள்...! கோலி -அனுஷ்கா நன்றி
x
தினத்தந்தி 20 Dec 2021 3:52 AM GMT (Updated: 2021-12-20T09:22:43+05:30)

தங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் மாண்பை காக்கும் ஊடங்கங்களுக்கு கோலி -அனுஷ்கா தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா ,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி  பாலிவூட் நடிகையும் தனது  காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இந்த வருட தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வாமிகா என பெயரிட்டுள்ள கோலி - அனுஷ்கா தம்பதி இதுவரை அவர்கள் குழந்தையின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை.

இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்ட நிலையில், அங்கு கூடியிருந்த ஊடங்ககளிடம்  தனது மகளின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று விராட் கேட்டுக் கொண்டார். அதேபோல் எந்த ஊடகங்ளும்  அவர்களின் குழந்தை "வாமிகா " படத்தை வெளியிடவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் கோலி - அனுஷ்கா தம்பதி , தங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் தங்கள் கோரிக்கையை காக்கும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  கோலி - அனுஷ்கா தம்பதி தங்கள் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில் ," வாமிகாவின் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாததற்காக அனைத்து  ஊடக சகோதரத்துவத்திற்கு நாங்கள் நெஞ்சார்ந்த  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையைத் தேடுகிறோம், மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். படங்களை வெளியிடாமல்  விட்டுவிட்டதற்காக ரசிகர் மன்றங்களுக்கும் இணைய மக்களுக்கும் சிறப்பு நன்றி. 

Next Story