தொடரை வெல்ல அணியில் அனைவரது பங்களிப்பும் முக்கியம்: ராகுல் டிராவிட்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Dec 2021 4:36 PM GMT (Updated: 2021-12-25T22:06:43+05:30)

இதுபோன்ற தொடர்கள் அணி வீரர்களின் ஒருமித்த பங்களிப்பின் காரணமாக வெற்றி பெறுகின்றன.

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக்கிறது. இதுவும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றே அழைக்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ‘பாக்சிங் டே’யில் ஆஸ்திரேலியாவை உதைத்த இந்திய அணி, இந்த முறை தென்ஆப்பிரிக்காவை பதம் பார்க்குமா என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "நாங்கள் குழுவுடன் பேசிய விஷயங்களில் முக்கியமான ஒன்று, இதுபோன்ற தொடர்கள் அணி வீரர்களின் ஒருமித்த பங்களிப்பின் காரணமாக வெற்றி பெறுகின்றன. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்ற வேண்டும். நீங்கள் விராட் கோலியையோ அல்லது புஜாராவையோ அல்லது வேறு ஒருவரையோ மட்டும் நம்பி வெற்றி பெற முடியாது. நாங்கள் இங்கு வெற்றிபெற விரும்பினால், அனைவரின் பங்களிப்பும் தேவைப்படும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியின் ஒரு நபரின் தனிப்பட்ட திறமைக்கு மாறாக ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பில் கவனம் செலுத்தப்படும்". இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.


Next Story