இந்தியா அபார பந்து வீச்சு: தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 197 ரன்களில் சுருண்டது


இந்தியா அபார பந்து வீச்சு: தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 197 ரன்களில் சுருண்டது
x
தினத்தந்தி 28 Dec 2021 3:39 PM GMT (Updated: 2021-12-28T21:09:52+05:30)

சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் முகம்மது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  கே எல் ராகுலின் சிறப்பான சதத்தின் மூலம் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.  இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள  முடியாமல் தடுமாறியது. இந்திய  பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தததால் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  62.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 197- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்  ஸ்கோரை விட தென் ஆப்பிரிக்க அணி  130 ரன்கள் பின் தங்கியுள்ளது.  பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில்   முகம்மது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. 

Next Story