வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 6 Feb 2022 7:58 AM GMT (Updated: 2022-02-06T13:28:19+05:30)

தனது ஆயிரமாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.


ஆமதாபாத்,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது இந்தியாவின் 1,000-வது ஒரு நாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

இரு அணி வீரர்கள் விபரம்:

வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட்(கே), ஜேசன் ஹோல்டர், பாபியன் ஆலன், அல்சாரி ஜோசப், கெமர் ரோச், அகேல் ஹொசைன்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.


Next Story