பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Feb 2022 8:24 PM GMT (Updated: 2022-02-09T01:54:03+05:30)

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (மார்ச்) முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியிலும் (மார்ச் 4-8), 2-வது டெஸ்ட் கராச்சியிலும் (மார்ச் 12-16), 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லாகூரிலும் (மார்ச் 21-25) நடக்கிறது.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட வலுவான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. சமீபத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தவர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். பாகிஸ்தானில் பிறந்தவரான உஸ்மான் கவாஜாவும் அணியில் நீடிக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் பதவியில் இருந்து விலகிய பிறகு இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆன்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டார். அவரது வழிகாட்டுதலில் ஆஸ்திரேலிய அணி சந்திக்கும் முதல் தொடர் இதுவாகும்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:-

கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நேசர், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

Next Story