தமிழக வீரர் நடராஜனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி


தமிழக வீரர் நடராஜனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
x
தினத்தந்தி 12 Feb 2022 12:12 PM GMT (Updated: 2022-02-12T17:42:22+05:30)

15-வது ஐ.பி.எல்தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது


பெங்களூரு, 

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 


இந்த 15-வது ஐ.பி.எல்தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது  மதியம் 12 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியது . தமிழக வீரர் நடராஜனை  ரூ 4 கோடிக்கு  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  ஏலம் எடுத்துள்ளளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை வாஷிங்டன் சுந்தர் , நிக்கோலஸ் பூரன் , நடராஜன் என 3 வீரர்களை எடுத்துள்ளது 

Next Story