நியூசிலாந்து வீரர்கள் கான்வே, சாண்ட்னரை ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே..!


நியூசிலாந்து வீரர்கள் கான்வே, சாண்ட்னரை ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே..!
x
தினத்தந்தி 13 Feb 2022 11:08 AM GMT (Updated: 2022-02-13T16:38:04+05:30)

நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் ₹1.9 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது.  இதில்,  எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. 

தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது. எனினும், அதை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனுக்காக ரூ.15.25 கோடியை வாரி வழங்கியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர்  ₹1.9 கோடிக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அதேபோல், நியூசிலாந்தின் துவக்க வீரர் டிவான் கான்வேயை ரூ. 1 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

Next Story