ஐ.பி.எல். மெகா ஏலத்தின் 2-ஆம் நாளில் ஜாக்பாட் அடித்த வீரர்கள் யார் யார்..?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2022 12:54 PM GMT (Updated: 13 Feb 2022 12:54 PM GMT)

ஏலத்தின் 2-ஆம் நாளான இன்று சென்னை அணி கனிசமான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நாளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. 

இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்தனர்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது. எனினும், அதை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனுக்காக ரூ.15.25 கோடியை வாரி வழங்கியது.

இந்நிலையில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில் இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.  இந்நிலையில் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஐ.பி.எல். மெகா ஏலத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று இதுவரை ஜாக்பாட் அடித்த வீரர்கள் விபரம்;

* இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது 

* இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது 

* இந்திய வீரர் ஜெயந்த் யாதவை ரூ.1.70 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் விஜய் சங்கரை ரூ.1.40 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் கெளதமை ரூ.90 லட்சத்துக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒடேன் ஸ்மித்தை ரூ.6 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை ரூ.1.10 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் மந்தீப் சிங்கை ரூ.1.10 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.

* தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை ரூ.2.60 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

* தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜேன்சனை ரூ.4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை ரூ.5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் சந்தீப் சர்மாவை ரூ.50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை ரூ.4.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* இந்திய வீரர் சந்தீப் சர்மாவை ரூ. 50 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி

* இந்திய வீரர் நவ்தீப் சைனியை ரூ. 2.60 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

* இந்திய வீரர் ஜெய்தேவ் உனட்கட்டை  ரூ. 1.30 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி

* இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனவை  ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

* 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டன் யாஷ் துல்லை ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி

* இந்திய அணி வீரர் திலக் வர்மாவை ரூ.1.70 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

* இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி 

* நியூசிலாந்து வீரர் மிட்சல் சாண்ட்னரை ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

* இந்திய வீரர் சுப்ரான்சு சேனாபதியை ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

* ஆஸ்திரேலியா வீரர் டிம் டேவிட்டை ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி 

* நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னேவை ரூ.1.90 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

* மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்டை ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 


Next Story