இந்தியாவுக்கு 158-ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்


இந்தியாவுக்கு 158-ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 16 Feb 2022 3:36 PM GMT (Updated: 2022-02-16T21:06:14+05:30)

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. 

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

முதல் ஓவரிலேயே புவனேஷ் குமார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் பிரண்டன் கிங்கை 4 ரன்களில் வெளியேற்றினார். இதையடுத்து, கைல் மேயர்ஸுடன் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரான் அதிரடி காட்டினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.  

கைல் மேயர்ஸ் 31 ரன்களில்  சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிது தடுமாற்றம் கண்டது. எனினும், நிகோலஸ் பூரன் (61 ரன்கள்) களத்தில் நின்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சவாலான இலக்கை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157- ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது. இதன் மூலம் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பந்து வீச்சை பொருத்தவரை இந்திய அணியில் ரவி பிஷோனி, ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 


Next Story