2-ஆவது டி20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு


2-ஆவது டி20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 18 Feb 2022 1:20 PM GMT (Updated: 2022-02-18T20:46:48+05:30)

இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.


கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.


இதில் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.  அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.Next Story