இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கி‌ஷனுக்கு ,ரோகித் சர்மா பாராட்டு


இலங்கைக்கு எதிரான போட்டியில்  சிறப்பாக விளையாடிய இஷான் கி‌ஷனுக்கு ,ரோகித் சர்மா பாராட்டு
x
தினத்தந்தி 25 Feb 2022 10:26 AM GMT (Updated: 2022-02-25T15:56:20+05:30)

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

லக்னோ,

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது 

இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் குவித்தார் .
இது குறித்து பேட்டியளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது ;

இஷான் கி‌ஷனின் மன நிலையும், திறமையும் எனக்கு தெரியும். அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 6 ஓவர்களுக்கு பிறகு அவர் நல்ல அடித்தளத்தை உருவாக்கினார். அது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இடைவெளிகளை கண்டறிந்து பந்துகளை விளாசினார்.

ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து இன்னும் அதிகமானவற்றை நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் அவரை முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story