மும்பைக்கு எதிராக சென்னை அணிக்கு 2 போட்டிகள்... கொல்கத்தாவுக்கு எதிராக 1 போட்டி- புதிய ஐபிஎல் விதிமுறை...!


மும்பைக்கு எதிராக சென்னை அணிக்கு 2 போட்டிகள்...  கொல்கத்தாவுக்கு  எதிராக 1 போட்டி- புதிய ஐபிஎல் விதிமுறை...!
x
தினத்தந்தி 25 Feb 2022 12:43 PM GMT (Updated: 2022-02-25T18:13:09+05:30)

ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள அணிக்கு எதிராக இரண்டு முறை மோத வேண்டும்.

மும்பை,

10 அணிகள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த தொடர் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் குரூப்பில் மும்பை , கொல்கத்தா , ராஜஸ்தான் , டெல்லி , லக்னோ அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதே போல் 2-வது  குரூப்பில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு , பஞ்சாப் , குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள அணிக்கு எதிராக இரண்டு முறை மோத வேண்டும். அதே போல் மற்ற குரூப்பில் உள்ள அணிகளுக்கு எதிராக ஒரு முறை மோத வேண்டும்.

இதை தவிர இரண்டு குரூப்பிலும் தங்கள் வரிசைக்கு எதிராக உள்ள அதே அணியிடம் இரண்டு முறை மோதவுள்ளன. அதாவது இரண்டாவது குரூப்பில் இடம்பெற்றுள்ள சென்னை அணி தங்கள் குரூப்பில் உள்ள மற்ற 4 அணிகளிடமும் 2 முறையும் முதல் குரூப்பில் உள்ள அணிகளிடம் 1 முறையும் மோதும் . 

அதுமட்டுமின்றி முதல் குரூப்பில் முதல் இடம் பெற்றுள்ள மும்பை அணியும் 2 வது குரூப்பில் முதல் இடம்பெற்றுள்ள சென்னை அணியும் இரண்டு முறை பலப்பரீச்சை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story