டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்


Image courtesy: Twitter  BCCI
x
Image courtesy: Twitter BCCI
தினத்தந்தி 14 March 2022 12:56 PM GMT (Updated: 2022-03-14T18:26:26+05:30)

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் டேல் ஸ்டெயின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்

பெங்களூரு,

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. 

இன்று நடந்த 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுவதுமாக கைப்பற்றியது. 

இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்  டெஸ்ட் போட்டியில் தனது 440-வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (439 விக்கெட்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது 8-வது இடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதல் இடத்திலும் (800 விக்கெட்கள்), மறைந்த ஆஸ்திரேலியா வீரர் வார்னே இரண்டாவது இடத்திலும் (708 விக்கெட்கள்)  இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3-வது இடத்திலும் (640 விக்கெட்கள்) உள்ளனர்.

Next Story