ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் மற்றும் தொடக்க வீரராக யுஸ்வேந்திர சாஹல்? -இணையத்தை கலக்கும் பதிவுகள்


image courtesy: Rajasthan royals
x
image courtesy: Rajasthan royals
தினத்தந்தி 16 March 2022 9:32 AM GMT (Updated: 2022-03-16T15:02:25+05:30)

ராஜஸ்தான் அணியின் டுவிட்டர் பக்கத்தில் "அணியின் புதிய கேப்டன் சாஹல்" என பதிவிடப்பட்டுள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26ம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் பெங்களுருவில் நடந்தது . இந்த ஏலத்தில் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் இந்திய அணியில்  உள்ள அனைத்து  வீரர்களும் சமீபத்தில் தாங்கள் விளையாடும் ஐபிஎல் அணியின் பயிற்சி முகாமில் இணைந்தனர். அந்த வகையில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ள யுஸ்வேந்திர சாஹல் தற்போது அந்த அணியின் டுவிட்டர் கணக்கின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

முதலில் அவர் " ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டுவிட்டர் கணக்கின் கடவுச்சொல்லை தந்தமைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். பின்னர் யுஸ்வேந்திர சாஹல் தனது புகைப்படத்தை அணியின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து " ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் சாஹல்" என பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு தான் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் பட்லர் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக சாஹல் தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவுகள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Next Story