ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை : விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி கேப்டன் ரோகித் சர்மா முன்னேற்றம் ..!!


Image courtesy: ANI
x
Image courtesy: ANI
தினத்தந்தி 16 March 2022 10:13 AM GMT (Updated: 16 March 2022 10:13 AM GMT)

தொடர்ந்து பல வருடங்களாக முதல் 5 இடங்களுக்குள் இருந்த விராட் கோலி தற்போது மிகவும் பின்தங்கியுள்ளார்.

துபாய்,

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் 54-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து பல வருடங்களாக முதல் 5 இடங்களுக்குள் இருந்த விராட் கோலி தற்போது 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் 10-வது இடத்தில் உள்ளார்.

அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்  பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் தென்னாபிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா உள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆல் ரவுண்டர்ககளுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதல் இடம் பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story