பெண்கள் உலகக்கோப்பை: இந்திய அணி முதலில் பேட்டிங்..!


கோப்புப் படம் ANI
x
கோப்புப் படம் ANI
தினத்தந்தி 19 March 2022 1:13 AM GMT (Updated: 19 March 2022 1:13 AM GMT)

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆக்லாந்து,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்கொள்கிறது. 

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளை வரிசையாக துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரைஇறுதியை உறுதி செய்து விடும். 
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் சரண் அடைந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்தியா முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. 

உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Next Story