பள்ளி நாட்களில் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன் - கவுதம் கம்பீர்


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 21 March 2022 4:04 PM GMT (Updated: 2022-03-21T21:34:22+05:30)

பள்ளி நாட்களில் நிறைய சண்டையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர்  கவுதம் கம்பீர். இவர் நீண்ட காலம் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இந்தியாவின் இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 

இந்த நிலையில் தற்போது அவர் தனது பள்ளிநாட்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

நான் பள்ளியில் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளி இறுதி நாளில் , அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல விரும்பும்போது நான் ரஞ்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு நான் உடனடியாக தேர்வில் கவனம் செலுத்தினேன். 

நாங்கள் ஒருமுறை மேயோ கல்லூரிக்குச் சென்று இருந்த போது ஐடிஎஸ்சி போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போதும் நாங்கள் சண்டையில் ஈடுபட்டோம்.

மிகவும் தவறான செயல் என்று நான் இப்போது உணர்ந்த மற்றொரு விஷயமும் உள்ளது. நாங்கள் ஒருமுறை ஓமன் வீட்டில் தங்கியிருந்தோம். அந்த வீட்டின் உரிமையாளர்  ஓமனில் இருந்து பிரமாண்டமான பிரேம் கொண்ட பெரிய உருவப்படத்தை கொண்டு வந்திருந்தார்.  இரவில் நாங்கள் சண்டை போட்டு அந்த படத்தை உடைத்தோம். அதைக் கண்ட அவர் அழ தொடங்கிவிட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story