ஐபிஎல் 2022 : குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 March 2022 11:13 AM GMT (Updated: 2022-03-28T16:43:16+05:30)

குஜராத், லக்னோ ஆகிய இரண்டு இரு அணிகளும் இந்த சீனில் புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளாகும்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பின்னர் நேற்று நடந்த முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. நேற்று இரவு நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது .

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற இருக்கும் 4-வது போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரண்டு இரு அணிகளும் இந்த சீனில் புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளாகும்.

குஜராத் அணியை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழி நடத்தவுள்ளார். அதே போல் கடந்த சீனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story