"பும்ரா என்ன செய்துவிட போகிறார் என கோலி கூறினார்"- முன்னாள் கிரிக்கெட் வீரரின் பேச்சால் பரபரப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 March 2022 12:46 PM GMT (Updated: 2022-03-28T18:16:24+05:30)

ஆர்சிபி அணியில் ஜஸ்பிரித் பும்ரா வாங்கப்படாததற்கு கோலி தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் பட்டேல். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு , மும்பை உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூரு அணிக்காக விளையாடினர். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் ஆர்சிபி அணியில் ஜஸ்பிரித் பும்ரா முன்பே வாங்கப்பட்டிருப்பார் என்றும் கோலி தான் மறுத்துவிட்டார் என்றும் பார்த்தீவ் பட்டேல் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய பார்திவ் பட்டேல் கூறுகையில, " நான் 2014ம் ஆண்டு ஆர்சிபியில் விளையாடிய போது, கோலியிடம் பேசினேன். பும்ரா என்ற ஒரு பவுலர் சிறப்பாக செயல்படுகிறார், அவரை எடுக்கலாமா என்று கேட்டேன்

அதற்கு பதிலளித்த அப்போதைய கேப்டன் விராட் கோலி, என்ன பும்ரா, வும்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான்' " என கோலி தெரிவித்ததாக பார்திவ் பட்டேல் கூறியுள்ளார்.

பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் டெஸ்ட் போட்டியின் துணை கேப்டனாக உள்ள அவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி பலமுறை கோப்பை வெல்ல  முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story