நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணி வெற்றி


நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 29 March 2022 10:13 AM GMT (Updated: 2022-03-29T15:43:46+05:30)

நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது .


நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி ,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .

இரு  அணிகளுக்கும் இடையிலான  டி20 போட்டி  மழையால் ரத்து செய்யப்பட்டது .இந்நிலையில் நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது .

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது .அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் ரிபோன் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் எடுத்தார் .


இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 38.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 .
நியூசிலாந்து அணியில் வில் யங் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்  103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்  இருந்தார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டி வருகிற ஏப்ரல்2ம் தேதி நடக்கிறது .

Next Story