கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்த லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி..!


கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்த லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி..!
x
தினத்தந்தி 29 March 2022 11:08 AM GMT (Updated: 2022-03-29T16:38:40+05:30)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.


15வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின 

 நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுக்க தடுமாறியபோது  சிறப்பாக விளையாடிய 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த இளம் வீரர் பதோனி தனக்கு ஆதரவளித்த லக்னோ அணியின் ஆலோசகர்  கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்தார்.

போட்டிக்கு பிறகு இது குறித்து பதோனி கூறியதாவது:-

கவுதம் கம்பீர்  எனக்கு நிறைய ஆதரவளித்தார். எனது இயல்பான விளையாட்டை விளையாடுமாறும் நீங்கள் நல்ல ஸ்கோர்   எடுப்பீர்கள் எனவும் அவர் கூறினார். 

மேலும் அவர் என்னிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டியதில்லை. அதற்கு மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினார் என தெரிவித்துள்ளார்.  

பதோனியை தொடக்க விலையான 20 லட்சத்திற்கு லக்னோ அணி பதோனியை ஏலம் எடுத்தது. குறிப்பிடத்தகக்து 


Next Story