குஜராத் அணியுடனான தோல்வி : வெற்றி போல் உணர்வதாக தெரிவித்த கேஎல் ராகுல்- கேலி செய்யும் ரசிகர்கள்..!


Image Courtesy : Twitter @klrahul11
x
Image Courtesy : Twitter @klrahul11
தினத்தந்தி 29 March 2022 1:05 PM GMT (Updated: 2022-03-29T18:35:58+05:30)

போட்டி முடிந்த பிறகு கேஎல் ராகுல் பதிவிட்ட டுவிட்டர் கருத்தை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் மற்றும்  லக்னோ அணிகள் மோதின.

இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் இந்த போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. 

இந்த நிலையில் தற்போது போட்டி முடிந்த பிறகு அவர் பதிவிட்ட டுவிட்டர் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இந்த போட்டி குறித்து கேஎல் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் , " நாங்கள் போராடிய விதத்தை பார்க்கும்போது  இதை ஒரு வெற்றியாக உணர்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தோல்வி அடைந்து இருந்தபோதும்  அதை வெற்றியாக உணர்வதாக ராகுல் வெளியிட்ட பதிவை தற்போது பலர் கேலி செய்தும் வறுத்தெடுத்தும் வருகின்றனர். 

Next Story