ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய 7 புதுமுக வீரர்கள்


Image Courtesy : Twitter Rajasthan Royals
x
Image Courtesy : Twitter Rajasthan Royals
தினத்தந்தி 29 March 2022 3:04 PM GMT (Updated: 2022-03-29T20:34:29+05:30)

ராஜஸ்தான் அணிக்காக 7 புது முகவீரர்கள் இந்த போட்டியில் விளையாடி வருகின்றனர்.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக முதல் முதலாக 7 புது முகவீரர்கள் விளையாடி வருகின்றனர். தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் , நாதன் கூல்டர்-நைல், ரவிசந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா என 7 பேரும் ராஜஸ்தான் அணியில் புதிதாக விளையாடுகின்றனர்.

Next Story