ஐபிஎல் 2022 : கொல்கத்தா - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 March 2022 10:52 AM GMT (Updated: 30 March 2022 10:52 AM GMT)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன.

பெங்களூரு அணி தங்கள் முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது. அதே போல் கொல்கத்தா அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருந்தது.

வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் முதல் வெற்றியை பெற பெங்களுரு அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

Next Story