ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : சச்சின், விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை முறியடித்த பாபர் அசாம்..!!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 30 March 2022 12:23 PM GMT (Updated: 2022-03-30T17:53:36+05:30)

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விராட் கோலி ஆகியோரின் சாதனைகளை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

லாகூர்,

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் லாகூரில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்று நடந்த போட்டியில் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை  கடந்தார். 

இத மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை  வேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் இந்த சாதனையை தனது 82-வது போட்டியில் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஹஷிம் அம்லா (81 போட்டிகள் ) உள்ளார். 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விவி ரிச்சர்ட்ஸ் (88 போட்டிகள் ) உள்ளார். 4-வது இடத்தில் ஜோ ரூட்டும் (91 போட்டிகள் ) 5-வது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 112-வது போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.


Next Story