ஐபிஎல் 2022 : டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 March 2022 1:35 PM GMT (Updated: 2022-03-30T19:05:56+05:30)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்துகின்றன.

பெங்களூரு அணி தங்கள் முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது. அதே போல் கொல்கத்தா அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் இன்று வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் முதல் வெற்றியை பெற பெங்களுரு அணியும் களமிறங்குகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Next Story