ஐபிஎல் கிரிக்கெட் : ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 5 April 2022 1:36 PM GMT (Updated: 2022-04-05T19:06:35+05:30)

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 மும்பை, 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தங்கள் முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை சாய்த்தது. 

இந்த நிலையில் இன்று இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்றுள்ள பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Next Story