தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் - டூ பிளேசிஸ் விருப்பம்


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 6 April 2022 10:32 AM GMT (Updated: 2022-04-06T16:02:44+05:30)

தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் டூ பிளேசிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

அதன்பின் தினேஷ் கார்த்திக் - ‌ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ‌ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் தினேஷ் கார்த்திக் பற்றி கூறுகையில் , " அவர் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். 

ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக தூரத்தில் இருந்து பின்னர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல களத்தில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் தேவை. அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் " என தெரிவித்தார்.

Next Story