நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்- ரசிகர்கள் அதிர்ச்சி


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 6 April 2022 11:38 AM GMT (Updated: 2022-04-06T17:08:43+05:30)

பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இது வரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த அணியின் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் காயம் காரணமாக இந்த ஐ.பி.எல் சீசனில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் ஜான் க்ளோஸ்டர் உறுதி செய்துள்ளார்.

நாதன் கோல்டர் நைல் இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்று இருந்தார். அந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Next Story