களத்தில் யார் வேகமானவர் நீங்களா அல்லது கோலியா? டூ பிளேசிஸ் சுவாரசிய பதில்- வைரல் வீடியோ


Image Courtesy : @IPL/ BCCI
x
Image Courtesy : @IPL/ BCCI
தினத்தந்தி 6 April 2022 12:56 PM GMT (Updated: 2022-04-06T18:26:50+05:30)

களத்தில் வேகமாக செயல்படுபவர் யார் என்ற கேள்விக்கு டூ பிளேசிஸ் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

அதன்பின் தினேஷ் கார்த்திக் - ‌ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ‌ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு பேசிய அணியின் கேப்டன் டூ பிளேசிஸ்-யிடம் ஹர்ஷா போக்லே கேள்வி கேட்கையில், " களத்தில் யார் வேகமாக செயல்படுபவர்கள் நீங்களா அல்லது கோலியா ? " என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த டூ பிளேசிஸ் " நிச்சயமாக விராட் கோலி தான் " என புன்னகையுடன் தெரிவித்தார். அவரின் இந்த பதிலானது தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Next Story