ஐபிஎல் கிரிக்கெட் : மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 6 April 2022 1:33 PM GMT (Updated: 2022-04-06T19:03:15+05:30)

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதுவரை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்த மும்பை அணி இந்த போட்டியில் முதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது .அதே நேரத்தில் 3 போட்டியில் 2 வெற்றிகளை பெற்ற கொல்கத்தா அணி 3-வது வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

Next Story