ஐ.பி.எல் விதிமீறல் : நிதிஷ் ராணாவுக்கு அபராதம் - பும்ராவுக்கு எச்சரிக்கை


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 7 April 2022 7:05 AM GMT (Updated: 2022-04-07T12:35:30+05:30)

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது .கொரோனா பரவல் காரணமாக போட்டி மும்பையில் உள்ள மைதானங்களில் நடைபெற்று  வருகிறது. இந்த தொடரில் நேற்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் இந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை  மீறியதாக கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணாவுக்கு அபராதமும் ,  மும்பை அணியின் பும்ராவுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது .

நிதிஸ் ராணாவுக்கு போட்டி சம்பளத்தில் 10 சதவீதம் அபராதமும் ,பும்ராவுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


Next Story