வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து விளையாடும் தினேஷ் கார்த்திக் - ரகசியம் என்ன ?


Image Courtesy : @IPL/ BCCI
x
Image Courtesy : @IPL/ BCCI
தினத்தந்தி 7 April 2022 10:56 AM GMT (Updated: 2022-04-07T16:28:04+05:30)

மற்ற வீரர்களை காட்டிலும் கார்த்திக் வித்தியாசமான முகப்பை உடைய ஹெல்மெட்டை அணிந்து விளையாடுவது வழக்கமாகும்.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது

சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளில் கூட தினேஷ் கார்த்திக் மற்ற வீரர்களை காட்டிலும் வித்தியாசமான முகப்பை உடைய ஹெல்மெட்டை அணிந்து விளையாடுவது வழக்கமாகும்.

அவரை போன்றே ஐதராபாத் அணி வீரர் ராகுல் திரிபாதியும் தினேஷ் கார்த்திக் போன்றே ஹெல்மெட் அணிந்து விளையாடுபவர். அதற்கு காரணம் என்னவெனில் மற்ற வடிவிலான ஹெல்மெட்களை காட்டிலும் கார்த்திக் அணியும் ஹெல்மெட்யின் எடை மிகவும் குறைவாகும். 

இது போன்ற ஹெல்மெட் அணிந்து விளையாடும் போது தலையின் கணம் குறைந்து வீரர்கள் ஆட்டத்தில் மேலும் கவனம் செலுத்தலாம் என்ற நோக்கத்தோடு சிலர் இந்த ஹெல்மெட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

கார்த்திக், திரிபாதி ஆகியோர் மட்டுமின்றி இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஆகியோர் இந்த வகையான ஹெல்மட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story