சென்னை அணியின் "ஆர்ஆர்ஆர்" வீரர்கள் - அணி நிர்வாகம் பகிர்ந்த வைரல் புகைப்படம்


Image Courtesy : @ChennaiIPL
x
Image Courtesy : @ChennaiIPL
தினத்தந்தி 7 April 2022 2:15 PM GMT (Updated: 2022-04-07T19:45:30+05:30)

சென்னை அணி அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியுடன் நாளை மறுநாள் பலப்பரீட்சை நடத்துகிறது .

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி - லக்னோ அணிகள் மோதி வருகின்றன.

அதே நேரத்தில் தொடரின் நடப்பு சாம்பியன்களான சென்னை அணி தாங்கள் விளையாடிய 3  போட்டிகளிலும் தோல்விடைந்து புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அதே போல் 5 முறை சாம்பியன்களான மும்பை அணியும்  இந்த முறை 3 தோல்விகளை சந்தித்து திணறிவருகிறது.

சென்னை அணி தங்கள் அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியுடன் நாளை மறுநாள் பலப்பரீட்சை நடத்துகிறது . இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சயில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராபின் உத்தப்பா , ருதுராஜ் மற்றும் ராயுடு ஆகியோர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை சென்னை அணி தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

குறிப்பாக சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற "ஆர்ஆர்ஆர்" திரைப்படத்தை குறிப்பிட்டு ராபின், ருதுராஜ், ராயுடு (முதல் எழுத்து ஆர் ) ஆகியோரின் புகைப்படங்களை அணி நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

Next Story