ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்


ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
x
தினத்தந்தி 9 April 2022 11:55 AM GMT (Updated: 2022-04-09T17:25:49+05:30)

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னிலும் வெளியேறினர். 

சென்னை அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 48 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 27 ரன்கள் எடுத்தார். டோனி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் நடராஜன், வாஷிங்டன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது. Next Story