ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 10 April 2022 9:49 AM GMT (Updated: 2022-04-10T15:19:40+05:30)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.  4 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி , 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தில்  உள்ள கொல்கத்தா நைட்ரடர்ஸ், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் களம் இறங்குகிறது. 

டெல்லி கேபிடல்ஸ் அணியும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் நோக்கத்துடன் வரிந்து கட்ட உள்ளது. இதனால், இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது.


Next Story