ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : இந்திய வீரர் ஒருவர் மட்டுமே இடம்பிடிப்பு


Image Courtesy : Twitter/ BCCI
x
Image Courtesy : Twitter/ BCCI
தினத்தந்தி 13 April 2022 11:08 AM GMT (Updated: 13 April 2022 11:08 AM GMT)

பேட்ஸ்மேன்,பந்துவீச்சாளர் என அனைத்து தரவரிசை பட்டியலிலும் சேர்த்தே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான  புதிய தரவரிசை பட்டியலை இன்று  வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என அனைத்து தரவரிசை பட்டியலிலும் சேர்த்தே  ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மட்டும் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மமுதல் இடத்தில் உள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணியின் சம்சி முதல் இடத்திலும் இங்கிலாந்து நாட்டின் அடில் ரஷீத் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மது நபி முதல் இடத்தில் உள்ளார்.

Next Story