சென்னையை போன்று ’அதி ஆக்ரோஷ’ பாணியை மும்பை பின்பற்ற வேண்டும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்


Image Courtesy: IPL
x
Image Courtesy: IPL
தினத்தந்தி 13 April 2022 11:16 AM GMT (Updated: 2022-04-13T16:46:07+05:30)

வெற்றிபெற சென்னையை போன்ற ‘அதிஆக்ரோஷ’ பாணியை மும்பை பின்பற்ற வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடத்த லீக் போட்டியில் பெங்களூரு அணியை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 4 தொடர் தோல்விக்கு பின் நடப்பு ஐபிஎல்-இல் சென்னை தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களுக்கு 60 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சென்னை அணி கடைசி 10 ஓவரில் ரன் மழை பொழிந்தது. கடைசி 10 ஓவரில் மட்டும் சென்னை அணி 165 ரன்கள் குவித்தது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சென்னை அணியின் உத்தப்பா 88 ரன்களும், ஷிவம் துபே 95 ரன்களையும் குவித்தனர்.  

இதற்கிடையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை தனது வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 4 போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் உள்ளது.

அதேவேளை, மும்பை அணி இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவுக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை வெற்றிபெற எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான் ஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்வான் கூறுகையில், பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி பின்பற்றிய ’அதி ஆக்ரோஷமான’ பாணியை பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணி பின்பற்றினால் வெற்றி பெறும். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை கையாண்ட யுக்தியை மும்பை அணி அச்சு (காப்பி) எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். அதி ஆக்ரோஷமான பாணியை மும்பை அணி பின்பற்றினால் அந்த அணி வரும் போட்டிகளில் வெற்றிபெறும்’ என்றார்.     

Next Story