ஐபிஎல் : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் திரிபாதி அதிரடி அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 15 April 2022 5:24 PM GMT (Updated: 15 April 2022 5:24 PM GMT)

அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்

மும்பை,

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் ,நிதிஷ் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர் 70 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார் . கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசல் அதிரடி காட்டினார் .அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175  ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 3 ரன்களிலும் ,கேன் வில்லியம்சன் 17  ரன்களிலும்  ஆட்டமிழந்தனர் .தொடர்ந்து ராகுல் திரிபாதி ,ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினர் .

மார்க்ரம் நிதான ஆட்டத்தை தொடர ,திரிபாதி பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்கவிட்டார் .அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் 

Next Story