ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல் ராகுல் அரைசதம்


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 16 April 2022 11:13 AM GMT (Updated: 16 April 2022 11:13 AM GMT)

கே.எல் ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார் .

மும்பை,

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 26-வது லீக் ஆட்டத்தில்  மும்பை - லக்னோ அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .

அதன்படி லக்னோ  அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் ,கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடினர் .தொடக்க விக்கெட்டுக்கு  52 ரன்கள் சேர்த்தனர் .இதனை தொடர்ந்து டி காக் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த மணிஷ் பாண்டே , ராகுலுடன்  சேர்ந்து சிறப்பாக விளையாடினார்  .பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்கவிட்டனர் .அதிரடியாக விளையாடிய கே.எல் ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார் .

Next Story