ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் அதிரடி சதம்..!


ஐபிஎல் : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் அதிரடி சதம்..!
x
தினத்தந்தி 16 April 2022 11:56 AM GMT (Updated: 2022-04-16T17:53:04+05:30)

கே.எல்.ராகுல் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .

மும்பை,

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 26-வது லீக் ஆட்டத்தில்  மும்பை - லக்னோ அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .

அதன்படி லக்னோ  அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் ,கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடினர் .தொடக்க விக்கெட்டுக்கு  52 ரன்கள் சேர்த்தனர் .இதனை தொடர்ந்து டி காக் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த மணிஷ் பாண்டே , ராகுலுடன்  சேர்ந்து சிறப்பாக விளையாடினார்  .பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்கவிட்டனர் .சிறப்பாக  விளையாடிய கே.எல் ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார் 

அரைசதம் கடந்தபிறகு அதிரடியாக விளையாடிய  கே.எல்.ராகுல் 56  பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .இது கே.எல் ராகுல் ஐபிஎல் தொடரில் அடித்த 3வது சதம் ஆகும் 

Next Story