தொடரும் மும்பை அணியின் தோல்வி - ரோகித் சர்மா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 17 April 2022 1:02 PM GMT (Updated: 2022-04-17T18:32:14+05:30)

மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது

மும்பை,

நேற்றைய  ஐ.பி.எல். போட்டியில் 26-வது லீக் ஆட்டத்தில்  மும்பை - லக்னோ அணிகள் மோதின .இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது .

இந்த போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணிக்கு இது 6வது தோல்வி ஆகும் . மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறது .இது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

இந்நிலையில் தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ;

மும்பை அணியின், தோல்விகளுக்கு நான் முழு பொறுப்பேற்று கொள்கிறேன். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நான் செயல்படவில்லை.அடுத்து வரும் போட்டிகளில் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் .


Next Story