ஐபிஎல்; சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு


ஐபிஎல்;  சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 17 April 2022 1:44 PM GMT (Updated: 2022-04-17T19:14:43+05:30)

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது


மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  குஜராத் - சென்னை  அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்படுகிறார் .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில்  டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளது 

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி (லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 4 ஆட்டங்களில் (கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம்) தொடர்ச்சியாக தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Next Story