ஐபிஎல் 2022 : சாம்சன், பட்லர் வேகத்தை சமாளிக்குமா கொல்கத்தா அணி ?


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 18 April 2022 11:12 AM GMT (Updated: 2022-04-18T16:42:21+05:30)

ஐபிஎல் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 30வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் , ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் புள்ளிப்பட்டியலில் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடம் வகிக்கும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் , அணியின் கேப்டன் சாம்சன் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் கொல்கத்தா அணியில் ரசல் , ராணா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

இரு அணிகளும் தங்கள் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகின்றன.

Next Story