ரன் வேட்டையை தொடரும் ஜாஸ் பட்லர்- கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தல்..!!


Image Courtesy : Twitter @rajasthanroyals
x
Image Courtesy : Twitter @rajasthanroyals
தினத்தந்தி 18 April 2022 2:44 PM GMT (Updated: 2022-04-18T21:01:36+05:30)

அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணி வகிக்கும் பட்லர் இந்த போட்டியிலும் வந்த வேகத்தில் பவுண்டரிகளாக விளாசினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது வரை ராஜஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 74 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story