விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை : ரவி சாஸ்திரி


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 20 April 2022 7:23 AM GMT (Updated: 20 April 2022 7:23 AM GMT)

விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார் .


மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது .இந்த போட்டியில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்,இந்த ஐபிஎல் தொடரில் கோலி ரன்கள் எடுக்க தடுமாறுகிறார் .மேலும் அவரின் பார்ம் மோசமாக உள்ளது .

இந்நிலையில் விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் -ல்  கூறுகையில் ;

விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை .அது 2 மாதங்கள் அல்லது ஒன்றைரை மாதங்கள் அவருக்கு ஒய்வு தேவை . இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். எனவே அதற்கு முன்னர்  அல்லது, சுற்றுப்பயணத்திற்கு பின்னர் கோலி ஓய்வு எடுக்க வேண்டும் .இன்னும்  6 முதல் 7 வருடங்கள் அவருக்கு கிரிக்கெட் காலம்  உள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்  

Next Story