விராட் கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்


விராட் கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்
x
தினத்தந்தி 20 April 2022 10:40 AM GMT (Updated: 2022-04-20T16:10:03+05:30)

20 ஓவர் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின .

இந்த போட்டியில் கே .எல்.ராகுல் 30 ரன்கள் எடுத்தார் .இதனால்  சர்வதேச , ஐ.பி.எல்., போட்டி உள்பட 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்க்சில் 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.அவர் 179 இன்னிங்சில் இந்த சாதனை படைத்துள்ளார் 

இதற்கு முன்பு விராட் கோலி 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். அவரை கே .எல்.ராகுல் முந்தியுள்ளார் 

Next Story