முதல் பந்திலே டக் அவுட், திருடு போன கார்- ஒரே நாளில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு வந்த சோதனை..!!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 20 April 2022 11:55 AM GMT (Updated: 2022-04-20T17:25:50+05:30)

ஒரே நாளில் தனக்கு நடந்த சோதனைகள் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கார்லோஸ் பிராத்வைட். இவர் தற்போது இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் டிஸ்ட்ரிக்ட் பிரீமியர் லீக் அணியான நோல் அண்ட் டோரிட்ஜ் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.

ஆறு மாத ஓய்வுக்கு பிறகு லீமிங்டன் சிசிக்கு எதிராக விளையாடிய அவர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்.

அதுமட்டுமின்றி அதே நாளில் பிராத்வைட்டின் காரும் திருடப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், " ஆறு மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டில் முதல் முறையாக பந்து வீசினேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் பந்திலே டக் ,  காரும் திருடப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.

Next Story