மயங்க் அகர்வால், தவான் ஆட்டமிழப்பு- டெல்லி அணிக்கு எதிராக பஞ்சாப் திணறல்..!!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 20 April 2022 2:49 PM GMT (Updated: 20 April 2022 2:49 PM GMT)

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும் தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
 
அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார்.

தற்போது வரை பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.

Next Story